தமிழ்ச் சமூக வரலாறு
[இலக்கியம்]

ஆசிரியர் கோ.கேசவன்

தமிழ்ச் சமூக வரலாறு - முன்னுரை

முனைவர் கோ.கேசவன் தமிழ் எழுத்தாளர், மார்க்சிய ஆய்வாளர். தமிழ்ச் சமூக வரலாறு அவரது பிரதான புலமைக்களங்களில் ஒன்று. தமிழ்ச் சமூக மறுமலர்ச்சியின் அடையாளங்களில் ஒன்றான தமிழியல் ஆய்வுகள், இன்று கல்விப்புல வட்டாரங்களில் சுருங்கியும் தேய்ந்தும் தேங்கியும் உள்ளமையை இந்நூலில் வரலாற்றுப் பூர்வமாக விவரிக்கின்றார்.

நூலின் உள்ளடக்கம்

நாட்டுப்புறவியல் ஒரு விளக்கம்

முதற்பதிப்பு - 1986

நாட்டுப்புறவியல் குறித்துச் சிறுவிளக்கம் தருதலே இச்சிறு நூலின் நோக்கமாகும். நாட்டுப்புறவியல் என்ற சொற்றொடரில் இரு கருத்தமைப்புகள் உள்ளன. 1.நாட்டுப்புறம் 2.இயல். இயல் எனில் ஒன்றைக் குறித்த கருத்துகளின் தொகுப்பாகும். அடுத்து, நாட்டுப்புறம் என்பதற்கு என்ன பொருள்? நாட்டுப்புறத் தான் என்றால் பாமரன், கிராமப்புறத்தான், விவசாயத் தொழில் சார்ந்தவன் என்று பல பொருள்கள் உண்டு.

கதைப்பாடல்களும் சமூகமும்

முதற்பதிப்பு - 1985

நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையிலிருந்து, காலனிய, அரை நிலவுடைமை உற்பத்தி முறையாக, முறையாக மாறத் தொடங்கிய காலகட்டத்தில் நிலவுடைமைச் சிதறலின் விளைவாகப் பழைய சமூக மதிப்பீடுகள் தகர்வது தவிர்க்க இயலாததாயிற்று. இந்த வரலாற்றுச் சூழலின் விளைபொருட்களாகக் கதைப்பாடல்கள் எவ்வாறு உற்பத்தியாயின என்பதை இத்தொகுப்பில் தெளிவாக்குகிறார் கோ.கேசவன்.

பள்ளு இலக்கியம் - ஒரு சமூகவியல் பார்வை

முதற்பதிப்பு - 1981

பல்வேறு தொழில் இனத்தவர்களைப் பற்றிய பாடல்கள் தமிழிலக்கியத்தில் குறைவு எனினும், அவற்றுள் பள்ளுப் பாடல்கள் சில குறிப்பிட்ட விதங்களில் சிறப்புத் தன்மை பெறுகின்றன.

புராணச் சார்புக் கதைப் பாடல்களில் ஆண் பெண் உறவுநிலை

முதற்பதிப்பு - 1987

புராணச்சார்புக் கதைப்பாடல்களில் வரும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவு நிலைகளை இச் சிறுநூல் மதிப்பிட முனைகிறது. புராணங்களில் வரும் பாத்திரங்களுக்கு மக்கள் மனதில் ஒவ்வொரு படிமம் ஏற்பட்டுள்ளது. இது மக்களின் உளவியல் உருவாக்கத்துக்குச் சாதகமான அல்லது பாதகமான பங்கு ஆற்றுகிறது.

இலக்கிய விமர்சனம் - ஒரு மார்க்சியப் பார்வை

முதற்பதிப்பு - 1984

இந்நூலுக்கு முன்பு, மார்க்சிய அடிப்படையில் சில திறனாய்வு நூல்களும் கட்டுரைகளும் வந்துள்ளன. அவை கலை இலக்கியங்களை மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் திறனாய்வு செய்துள்ளன; ஆயினும் முழுமையாக மார்க்சியக் கலை இலக்கியக் கோட் பாடுகளைத் தொகுத்துக் கூறும் நூல் ஒன்றேனும் தமிழில் வந்துள்ளதாகத் தெரியவில்லை. அவற்றை இந்நூலின் மூலம் சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளார் கோ.கேசவன்.

தமிழ்ச் சிறுகதைகளில் உருவம்

முதற்பதிப்பு - 1981

கலைத்திறன் என்பது மனிதச் செயல்பாடு ஆகும். ஆழ்ந்த மனக்கிளர்ச்சியுடையவர்களால் பழக்கத்தினாலும் பயிற்சியினாலும் உருவாகக்கூடிய இத்தகு கலைகளுள், சிறுகதையும் ஒன்றாகும். தமிழ்ச் சிறுகதைகளில் வடிவ அமைப்பு எங்ஙனம் அமைந்துள்ளது என்பதைக் காணுதலே இத்தொகுப்பின் நோக்கமாகும்.

பாரதி முதல் கைலாசபதி வரை

முதற்பதிப்பு - 1998

இன்றைக்கு சி.சுப்பிரமணிய பாரதியார் பிறந்து 115 ஆண்டுகள் கடந்துவிட்டன. பாரதிக்கு உருவச் சிலைகள், அறக்கட்டளைகள் நிரம்ப நிறுவப்பட்டன. அவர் பெயரிலேயே ஒரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. எனினும் அவரது வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்நூலில் விவரிக்கிறார் கோ.கேசவன்.

ஏன் படிக்க வேண்டும்?

சாதி, சமயம், வர்க்கம் முதலியவை பற்றி ஆழமான கண்ணோட்டம் கொண்ட பேராசிரியர் கோ.கேசவன் தமிழ்ச் சமூக வரலாற்றியலை மீட்டுருவாக்கம் செய்வதில் ஆர்வம் கொண்டு அதன் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு செவ்வியல் இலக்கியம் தொடங்கி சமகால இலக்கியம் வரை அதில் செயல்படக்கூடிய தமிழ் சமூக அசைவுகளை மிகச்சிறப்பாக இத்தொகுப்பின் மூலம் சிறப்பாக விவரிக்கின்றார்.

புத்தகம் வாங்க விரும்புவோர்

முனைவர் கோ. கேசவன் அவர்களின் தொகுப்பினை பற்றிய விமர்சனங்கள்

பேராசிரியர் கோ.கேசவன் அவர்களின் நூல்கள் இம்மண்ணில் மறைக்கப்பட வேண்டியவைகள் அல்ல மனதில் விதைக்கப்படவேண்டியவைகள். ஏன் என்பதற்கு சான்றாக சில வாசகர்களின் கருத்துக்கள் இங்கே!

Back To Top

Chat with us viaWhatsApp