தலித்தியம் - முன்னுரை

இழிசனர், தீண்டத்தகார், தாழ்த்தப்பட்டோர், அட்டவணைச் சாதியினர், அரிசன், தலித் என்றெல்லாம் அழைக்கப்படும் மனிதர்களைப் பற்றிய கட்டுரைகள். பெருமளவில் தமிழகச் சூழலை மையமாகக் கொண்டே தாழ்த்தப்பட்டோர் சிக்கல்கள் இங்கு அணுகப்பட்டன. அவர்களை அரசியல் இயக்கங்கள், மதவாத இயக்கங்கள், சாதிய இயக்கங்கள் எப்படிக் கையாண்டன, கையாள்கின்றன என்பன குறித்த விவரங்களை சேகரித்து தொகுப்பாய் வெளியிட்டுள்ளார் பேராசிரியர் கோ.கேசவன்.

நூலின் உள்ளடக்கம்

சமூக விடுதலையும் தாழ்த்தப்பட்டோரும்

முதற்பதிப்பு - 1994

மனிதத்துவ அடையாளமே மறுக்கப்பட்ட நிலையில் இந்தியனாக, தமிழனாக, ஒரு கட்சி உறுப்பினராக, ஒரு சமயத்தினராக, ஒரு சாதியாக, ஒரு வர்க்கத்தினராக என இப்படிப் பல அடையாளங்கள்... இவற்றுள் சமூக விடுதலையை மையமாகக் கொண்ட செயல்பாடுகளில் எதைச் சூடுவது? அதற்கான போராட்டம் என்ன? என்பன குறித்து இந்நூல் விளக்க முற்பட்டுள்ளது.

சாதியம்

முதற்பதிப்பு - 1995

சாதி, சாதிய இருப்பு, சாதிய எதிர்ப்பு, சாதிய ஒழிப்பு ஆகியவை குறித்த புரிதல்களை நீண்ட காலமாகவே நமது இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் அற நூல்களிலும் காண்கிறோம். இவற்றின் ஊடாகக் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுப் பழைய கோட்பாடுகள் நிரூபிக்கப்படும் முயற்சிகளோடு புதிய அணுகுமுறைகளைக் கொண்டு சாதியத்தின் பல பரிமாணங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

கோயில் நுழைவுப் போராட்டங்கள்

முதற்பதிப்பு - 1997

தலித்துகள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்பதும், அதைமீறி தலித்துகள் நுழைய நினைப்பதும் நுழைவதும் தொடர்ந்து நிகழ்ந்தேறிக் கொண்டே இருக்கின்றன. இரண்டுமே பண்பாட்டுத்தள நிகழ்வுகள். இவற்றின்பின் உள்ள ஆதிக்க அரசியலையும், ஆதிக்க எதிர்ப்பு அரசியலையும் விளங்கிக் கொள்ளவும் ஆன முயற்சியாக இந்நூல் அமைந்துள்ளது.

சாதி ஒழிப்பு - பெரியாரின் பங்கும் படிப்பினைகளும்

முதற்பதிப்பு - 1991

சாதி ஒழிப்பு குறித்து விரிவான அளவில் சிந்திக்கத்தக்கதும் எழுதவேண்டியதுமான இச்சிறு கட்டுரையை பெரியாரின் கருத்துப் பங்களிப்பு, நடைமுறைப் பங்களிப்பு, படிப்பினைகள் என மூன்றாகப் பிரித்துக் காண்போம்.

அம்பேத்கரும் சாதிய ஒழிப்பும்

முதற்பதிப்பு - 1998

சாதி, பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதனின் உயர்வு தாழ்வுகளோடு தொடர்பு கொண்டதாக விளங்குகிறது. தாழ்த்தப்பட்டோர்களுக்கு தனி குடியிருப்பு, தனி நீர்நிலை, தனிச் சுடுகாடு இவை மட்டுமில்லாமல் பல இடங்களில் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சாதியத்துக்கு எதிராக அம்பேத்கரின் பணி குறித்து இங்கு காண்போம்.

தலித் இலக்கியம் - சில கட்டுரைகள்

முதற்பதிப்பு - 1998

மராத்திய சூழலிலும் பின்னர்த் தமிழகச் சூழலிலும் தலித் இலக்கியம் குறித்துத் தொகுக்கப்பட்ட கோட்பாடுகளைப் பற்றிக் காணுதலே இங்கு நம் நோக்கமாகும்.

தலித் அரசியல்

முதற்பதிப்பு - 1998

சாதி, வர்க்கம் ஆகிய இரண்டு பரிமாணங்களில் தலித்துகள் தம் அடிமை நிலைகளிலிருந்து மீள்வதையே தலித் விடுதலை என்றும் அதற்கான அரசியலே தலித் அரசியல் என்றும் குறிப்பிடுகின்றோம். இது குறித்தும் பல கண்ணோட்டங்கள் உண்டு. அவற்றை குறித்து முனைவர் கோ. கேசவன் எவ்வாறு விவரித்துள்ளார் என்பதைக் காண்போம்.

ஏன் படிக்க வேண்டும்?

தலித்தியத்தை முன் வைத்து தமிழில் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதப்பட்டு வருகின்றன. தமிழ் எழுத்தாளர்கள் சிலரே தலித்தியத்தை மையமாக்கி எழுதி வருகின்றனர். தலித்தியம் தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரத்தில் எவ்வாறு அணுகப்பட்டது என்பதை இந்த ஆய்வுக் கட்டுரையின் வாயிலாக விவரித்துள்ளார் பேராசிரியர் கோ.கேசவன்.

புத்தகம் வாங்க விரும்புவோர்

வாசகர்களின் விமர்சனம்

பேராசிரியர் கோ.கேசவன் அவர்களின் நூல்கள் இம்மண்ணில் மறைக்கப்பட வேண்டியவைகள் அல்ல மனதில் விதைக்கப்படவேண்டியவைகள். ஏன் என்பதற்கு சான்றாக சில வாசகர்களின் கருத்துக்கள் இங்கே!

Back To Top

Chat with us viaWhatsApp